ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை தொடர் தொடருக்கான இந்தியா "ஏ" அணி அறிவிப்பு அபிஷேக் சர்மா, சூர்யவன்சிக்கு அணியில் இடம்
கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற உள்ள ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை தொடருக்கான இந்தியா ‘ஏ’ அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
15 வீரர்கள் கொண்ட இந்த அணிக்கு திலக் வர்மா கேப்டனாகவும், ரஜத் படிதார் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அணியில் அதிரடி தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் சர்மா, இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.
மேலும், ரிங்கு சிங், பிரப்சிம்ரன் சிங், குமார் குஷாக்ரா ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.