WPL Final 
விளையாட்டு

பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது

பெங்களூரு 13.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Manigandan Raja

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் உ.பி.வாரியர்ஸை எளிதில் வீழ்த்தி பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த உ.பி.வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு 13.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.