Vijay hazare 
விளையாட்டு

விஜய் ஹசாரே கோப்பை தொடர்

திரிபுரா அணிக்கு எதிரான போட்டியில் தமிழ்நாடு அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Manigandan Raja

விஜய் ஹசாரே கோப்பை தொடரில் திரிபுரா அணிக்கு எதிரான போட்டியில் தமிழ்நாடு அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பையில் நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு - திரிபுரா அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் குவித்தது. தொடர்ந்து 260 ரன்கள் இலக்குடன் விளையாடிய திரிபுரா அணி 42புள்ளி 4 ஓவர்களில் 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது.