Harman preet 
விளையாட்டு

மகளிர் கிரிக்கெட் சிறந்த வீராங்களுக்கான தரவரிசை பட்டியல்

ஆஸ்திரேலியா வீராங்கனை பெத் மூனி முதல் இடத்தையும், வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை ஹெய்லே மேத்யூஸ் 2வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

Manigandan Raja

மகளிர் கிரிக்கெட்டில் சிறந்த வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இதில் மகளிருக்கான டி20 கிரிக்கெட் பேட்டிங் வரிசையில் இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் 2 இடங்கள் முன்னேறி 13-வது இடத்தை பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் இந்தியாவின் ஸ்மிரிதி மந்தனா 3-வது இடத்தை தக்கவைத்துள்ளார். ஆஸ்திரேலியா வீராங்கனை பெத் மூனி முதல் இடத்தையும், வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை ஹெய்லே மேத்யூஸ் 2வது இடத்தையும் பிடித்துள்ளனர்.