ஆஸ்திரேலிய ஓபன் தொடருக்கான பரிசுத்தொகை 675 கோடி ரூபாயாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டிற்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் வரும் 12-ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரின் ஒட்டுமொத்த பரிசுத்தொகை 111புள்ளி 5 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடந்த ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் ஒட்டுமொத்த பரிசுத்தொகை 96 புள்ளி 15 மில்லியன் ஆஸ்திரேலிய டாலராக இருந்தது குறிப்பிடதக்கது.மேலும் படியுங்கள் : 2வது முறையாக ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய வீராங்கனை