ரூ.1000 க்கு மேல் மது வாங்கினால் இனி UPI, கார்டு மட்டுமே நவ.1ம் தேதி அமலுக்கு வருவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு ஜன.1முதல் ரூ.500-க்கு மேல் வாங்கினாலே ஆன்லைன் பேமெண்ட்
தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி முதல் டாஸ்மாக்கில் 1000 ரூபாய் மற்றும் அதற்கு மேல் மதுபானம் வாங்கும் நுகர்வோரிடம் இருந்து டிஜிட்டல் பரிவர்த்தனை வழியாக மட்டுமே அதற்கான தொகையை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஊழியர்களுக்கு டாஸ்மாக் உத்தரவிட்டுள்ளது.
மதுக்கடைகளில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதைத் தடுக்கவும், பணப் பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வரம்பு 2027 ஜனவரி 1 ம் தேதி முதல் 500 ரூபாயாக ஆகக் குறைக்கப்பட உள்ளது.