தலைமறைவான கைதிகளுக்கு வலை
தேனி மாவட்டம் தேக்கம்பட்டி சிறையில் தப்பிய 17 கைதிகளில் 13 பேர் பிடிபட்ட 4 கைதிகளுக்கு போலீசார் வலைவீசி உள்ளனர். 13 பேர் பிடிபட்ட நிலையில் 4 பேரை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.
கைதிகளை சுட்டுப்பிடிக்க உத்தரவு
சிறையில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயலும் கைதிகளை சுட்டுப்பிடிக்க சிறைத்துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது. புழல், தேனி சிறைகளில் இருந்து கைதிகள் தப்பிய நிகழ்வை அடுத்து டிஜிபி ரத்தோர் அதிரடி ஆணை பிறப்பித்து உள்ளார்.
சேகர்பாபு மீது வழக்குப்பதிவு
சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலக வாயிலில் வாக்குவாதம் செய்த திமுக எம்.எல்.ஏ. சேகர்பாபு மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டபோது காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தல், அவமரியாதையாக பேசுதல் என 2 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
திமுக கவுன்சிலர் கைது
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டபோது "கரூரிலேயே விஜயை முடித்திருக்கலாம்" என பேசிய திமுக கவுன்சிலர் சரவணன் கைது செய்யப்பட்டார். "கரூரிலேயே முடித்திருந்தால் இந்தநிலை வந்திருக்குமா?" எனப்பேசிய ஆடியோ, வீடியோ காட்சி வெளியான நிலையில், சரவணன் கைதாகி உள்ளார்.
இன்றோடு 17ஆவது நாள்
செஞ்சியில் கடந்த 12ம்தேதி வீட்டில் உறங்கிய 7 வயது சிறுமி ஹேமலதா மாயமான சம்பவத்தில் இன்றோடு 17ஆவது நாள் நிறைவடைந்து உள்ளது. பல்வேறு நபர்களை விசாரித்தும் 7வது நாளாக துப்பு கிடைக்காமல் சிபிசிஐடி போலீசார் திணறி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.