Trumph plan 
உலகம்

ஈரான் தலைவர் கமேனியை கொ*ல அமெரிக்கா திட்டம்?

அதிபர் டிரம்பின் உத்தரவைப் பெற்றதும் தாக்குதல் தொடங்கப்படலாம் எனக் கூறப்படுவதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

Manigandan Raja

கமேனியை கொல்ல அமெரிக்கா திட்டம் :

ஈரான் சுப்ரீம் தலைவர் அயதுல்லா கமேனி மற்றும் அவரது வாரிசுகளைக் கொல்ல அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு நெருக்கடி கொடுத்து வரும் டிரம்ப், மத்திய கிழக்கில் போர் கப்பல்கள், மற்றும் விமானங்களை அனுப்பி அச்சுறுத்தல் விடுத்து வருகிறார்.

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் கமேனி மற்றும் அவரது மகன் மொஜ்தபா கமேனி ஆகியோரை கொல்வதற்கு டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதிபர் டிரம்பின் உத்தரவைப் பெற்றதும் தாக்குதல் தொடங்கப்படலாம் எனக் கூறப்படுவதால் பதற்றம் அதிகரித்துள்ளது.