பிளாவியோ போல்சனாரோ 
உலகம்

பிரேசிலின் வலதுசாரி வேட்பாளர் அமெரிக்காவில் தஞ்சம்

அமெரிக்காவுக்கு தப்பிய ஃபிளாவியோ போல்சனாரோ

Manigandan Raja

பிரேசிலின் வலதுசாரி வேட்பாளர் அமெரிக்காவில் தஞ்சம் அமெரிக்காவுக்கு தப்பிய ஃபிளாவியோ போல்சனாரோ

பிரேசில் அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த வலதுசாரி வேட்பாளர் ஃபிளாவியோ போல்சனாரோ ((Flavio Bolsonaro)) அமெரிக்காவிற்கு தப்பிச் சென்றது அவமானகரமானது என தற்போதைய அதிபர் லுலா டா சில்வா (( Lula da Silva)) விமர்சித்துள்ளார்.

Flavio Bolsonaro

ஃபிளாவியோ போல்சனாரோ மீது சட்டவிரோத பண பரிமாற்றம், ஊழல் புகார்கள் உள்ளதால் அவர் நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

இந்நிலையில் குடும்பத்துடன் புளோரிடா சென்றுள்ள அவருக்கு அமெரிக்க அரசு விசா வழங்க ஒப்புக் கொண்டுள்ளதால், இருநாடுகளின் தூதரக உறவில் விரிசல் ஏற்படும் வாய்ப்புள்ளது.