சூடான் 
உலகம்

சூடானில் ராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதல்

மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்தையில் தாக்குதல்

Manigandan Raja

சூடானில் ராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதல் மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்தையில் தாக்குதல்

சூடானில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்தையில் ராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக எமர்ஜென்சி லாயர்ஸ் (Emergency Lawyers) எனும் மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

ட்ரோன் தாக்குதல்

2023-ம் ஆண்டு முதல் ராணுவத்திற்கும் துணை ராணுவப் படையினருக்கும் இடையே நடந்துவரும் உள்நாட்டுப் போரின் ஒரு பகுதியாக தெற்கு டார்பூரின் தலைநகரான நியாலா நகரில் நடந்த தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ள நிலையில், சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.