சீன பாகங்களை பயன்படுத்தி உள்நாட்டிலேயே தயாரிப்பு
- ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சீனாவிலிருந்து பெறப்பட்ட பாகங்களை கொண்டு அதிநவீன நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை உள்நாட்டிலேயே தயாரிக்க முயற்சிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
- ஈரானின் மிகவும் சக்திவாய்ந்த துல்லியமாக இலக்கைத் தாக்கும் ‘கைபர் ஷெக்கான்’ என்ற ஏவுகணையை சீன பாகங்களை பயன்படுத்தி மறுவடிவமைப்பு செய்ய முயற்சிக்கின்றனர்.
மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு
- தென்னாப்பிரிக்காவில் அரசியல் பிரமுகரின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு திரும்பியவர்கள் மீது மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். குழந்தை உள்பட 3 பேர் காயமடைந்தனர்.
- கேட்லெஹாங் நகர்ப்புற குடியிருப்புப் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் போலீசில் சரணடைந்தார்.
சவுதியில் இலங்கை தமிழரின் மரண தண்டனை ரத்து
- சௌதியில் இலங்கை தமிழரின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. இலங்கை கல்முனையை சேர்ந்த அனோஜன் சிவராசா, வேலைக்காக செளதி அரேபியாவுக்கு சென்றிருந்த நிலையில், முகநூலில் நபிகள் நாயகம் குறித்து தவறாக பதிவிட்டதாகக் கூறி, மரண தண்டனை விதிக்கப்பட்டது.