இஸ்லாமிய புனித நகரங்களான மெக்கா மற்றும் மதீனா மீது தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவலை, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மெக்கா மற்றும் மதீனாவை குறிவைத்து ஏவிய 2 அதிநவீன பாலிஸ்டிக் ஏவுகணைகளை, தங்களது வான் பாதுகாப்புப் படை இடைமறித்து நடுவானில் சுட்டு வீழ்த்தியதாக சவுதி அரேபியா தெரிவித்திருந்த நிலையில், ஹவுதிக்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.