Diabetis 
உலகம்

நீரிழிவு நோய் பாதிப்பில் இந்தியாவுக்கு 2ம் இடம்

சீனா முதலிடத்தில் உள்ளது. 2024ல், சீனாவில் 14 கோடியே 8 லட்சம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டனர்.

Manigandan Raja

கடந்த 2024ல், 9 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டதை அடுத்து, உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதாகவும், சர்வதேச ஆய்வில் தெரியவந்துள்ளது.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் சீனா முதலிடத்தில் உள்ளது. 2024ல், சீனாவில் 14 கோடியே 8 லட்சம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டனர். 9 கோடி பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இந்தியா இரண்டாவது இடத்திலும், சுமார் 4 கோடி பேருடன் அமெரிக்கா மூன்றாவது இடத்திலும் உள்ளது.