டிரம்ப் 
உலகம்

அமெரிக்காவின் ஒப்பந்தத்தை ஈரான் விரும்பவில்லை

இரண்டு நாட்களுக்கு முன்பே ஈரானுடன் முக்கிய ஒப்பந்தத்தை செயல்படுத்த விரும்பியதாகவும், ஆனால் அவர்கள் அதற்கு ஒத்துவரவில்லை எனவும் கூறினார்.

Manigandan Raja

ஈரான் தான் முதலில் தாக்குதல் நடத்தியது 

ஈரானுடனான போர் விவகாரம் குறித்து வெள்ளை மாளிகையில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இரண்டு நாட்களுக்கு முன்பே ஈரானுடன் முக்கிய ஒப்பந்தத்தை செயல்படுத்த விரும்பியதாகவும், ஆனால் அவர்கள் அதற்கு ஒத்துவரவில்லை எனவும் கூறினார்.

ஈரான் முதலில் தாக்குதல் நடத்தியதாகவும், அது மிகப்பெரிய தவறு எனவும் கூறிய டிரம்ப், ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக கூறினார்.

பதவியை ராஜினாமா செய்தார் உக்ரைன் பிரதமர் யூலியா 

கடந்த ஆண்டு ஜூலையில் உக்ரைன் பிரதமராக பதவியேற்ற யூலியா ஸ்விரைடென்கோ((Yulia Svyrydenko)), தனது பதவியை ராஜினாமா செய்தார்.

உக்ரைனின் மின்சாரக் கட்டமைப்பு மற்றும் எரிவாயு விநியோக அமைப்புகள் மீதான தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை அரசாங்கத்தின் முக்கிய சவாலாக இருக்கும் என்று யூலியா கூறினார்.

ஹமாஸ் சொந்தமான சோதனை சாவடி மீது இஸ்ரேல் தாக்குதல்

காசாவில் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காவல் படைக்குச் சொந்தமான சோதனை சாவடியில் இஸ்ரேல் படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். ஜபாலியா((Jabalia )) பகுதியில் உள்ள சந்தைக்கு அருகில் நான்கு ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.