ரஷ்யாவின் கிஸ்லியார் மாவட்டத்தை சூழ்ந்த வெட்டுக்கிளிகள்
ரஷ்யாவின் கிஸ்லியார் மாவட்டத்தை வெட்டுக்கிளிகளின் மிகப்பெரிய கூட்டம் சூழ்ந்துள்ள காட்சி வெளியாகியுள்ளது. லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் வானை மறைத்து இருளாக்கியுள்ளதால், வாகன ஓட்டிகளுக்குப் பார்வைத்திறன் பாதிக்கப்பட்டது.
விவசாய நிலங்களைச் சேதப்படுத்தி பயிர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் இந்தக் கூட்டத்தைக் கட்டுப்படுத்த, அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
டிராக்டர் மீது அதிவேகமாக வந்த ரயில் மோதி விபத்து
போலந்தில், டிராக்டர் மீது அதிவேகமாக வந்த ரயில் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. எச்சரிக்கை சிக்னலையும் மதிக்காமல் சென்றதே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.
டிராக்டர் ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படும் நிலையில், இந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.