ஹிந்தி நடிகர்களுக்கு கொ*ல மிரட்டல் விடுத்து வந்த நபர் கைது தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்த முக்கிய குற்றவாளி கலிபோர்னியாவில் வைத்து அமெரிக்க போலீஸார் கைது செய்தனர்
ஹிந்தி நடிகர்கள் உள்ளிட்ட பிரபலங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்த தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்த முக்கிய குற்றவாளியை அமெரிக்க போலீஸார் கைது செய்துள்ளனர்.
கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான பாக்ஸர் ஹாரி என்கிற ஹரிசந்த் ஜாட்டை, கலிபோர்னியாவில் அமெரிக்க அதிகாரிகள் கைது செய்தனர்.
அமெரிக்காவில் இருந்து செயல்பட்டு வந்த ஹாரி, சமூக வலைதளங்கள் மற்றும் ஆடியோ பதிவுகள் மூலம் பாலிவுட் பிரபலங்களுக்கு மிரட்டல் விடுத்து வந்தார்.