புலியை நண்பனாக்கி இருப்பேன் என்பது போல் ட்ரம்ப் AI வீடியோ
- பிரிட்டன் பூங்காவில் புலி தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை குறிப்பிட்டு AI வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஒரு போதும் இயற்கையை சீண்டாதீர்கள் என எச்சரித்துள்ளார்.
- ஒரு வேளை ட்ரம்ப் அந்த இடத்தில் இருந்திருந்தால், ஓடிப்பிடித்து விளையாடி புலியை நண்பனாக்கியிருப்பார் என்பது போல் அந்த AI வீடியோ சித்தரிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்தித் தொடர்பாளரான கேட்டி ஜக்காரியா
- வெள்ளை மாளிகையின் புதிய செய்தித் தொடர்பாளரான கேட்டி ஜக்காரியா ((Katie Zacharia)) தனது முதல் செய்தியாளர் சந்திப்பில் அதிபர் டிரம்பை தனது கணவர் என்று உளறி கொட்டிய வீடியோ இணையத்தில் கடும் கேலி கிண்டல் மற்றும் அதிகாரிகளின் விமர்சனங்களுக்கும் உள்ளாகியுள்ளது.
- முந்தைய செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் ((Karoline Leavitt)) பதவி விலகியதைத் தொடர்ந்து அதிபர் டிரம்பின் தீவிர ஆதரவாளரான கேட்டி ஜக்காரியா அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
டெல்டா ஏர் லைன்ஸ் விமானத்தில் அமெரிக்க நடிகை தகராறு
- லாஸ் ஏஞ்சலஸிலிருந்து நியூயார்க் சென்ற டெல்டா ஏர் லைன்ஸ் விமானத்தில் பணியாளர்களுடன் தகராறில் ஈடுபட்ட அமெரிக்க நடிகை Selma Blair, விமான பணியாளர் ஒருவரை கடித்ததற்காக கைது செய்யப்பட்டார்.
- முன்னதாக விமானத்தில் தகராறில் ஈடுபட்ட போது செல்மாவுக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், விமானம் தரையிறங்கியதும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.