பிரான்ஸில் வன்முறையாக மாறிய போராட்டம் வணிக நிறுவனங்கள் சூறை, தீவைப்பு சம்பவம் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்த போலீஸ்
பிரான்ஸில் விலைவாசி உயர்வை கண்டித்து நடைபெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்ததில், வணிக நிறுவனங்கள் சூறையாடப்பட்டதோடு, தீவைப்பு சம்பவங்களும் அரங்கேறின.
வன்முறை வெடித்ததை தொடர்ந்து, போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் கூட்டத்தை கலைத்தனர்.