பெஞ்சமின் நெதன்யாகுவை தனது கூட்டணியில் சேர்க்க தயார் எதிர்க்கட்சித் தலைவரான காடி ஐசென்கோட் பேச்சு
இஸ்ரேலின் எதிர்க்கட்சித் தலைவரான காடி ஐசென்கோட், அந்நாட்டின் அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் பணியை அதிகாரப்பூர்வமாகப் பெற்றுள்ள நிலையில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தனது கூட்டணி அமைப்பில் சேர்த்துக்கொள்ளத் தான் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது அந்நாட்டு மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, பல்வேறு கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.