தைஸ் மாகாணம் மீது ஏமன் அரசுப்படை தாக்குதல் - 7 பேர் பலி
ஏமன் நாட்டில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி மீது அரசுப்படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 40 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு பதிலடியாக தைஸ் மாகாணத்தில் சவுதி அரேபியாவுடன் ஏமன் அரசுப்படையினர் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
எல்லை தாண்டி வந்த பாகிஸ்தான் போராளிகள் 28 பேர் சுட்டுக்கொலை
பாகிஸ்தானிலிருந்து எல்லை தாண்டி வந்த 28 பேரை கிழக்கு நூரிஸ்தான் மாகாணத்தில் சுட்டுக் கொன்றதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில், பாகிஸ்தான் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
பயங்கரவாதம் மற்றும் எல்லை தாண்டிய வன்முறை தொடர்பாக ஆப்கானிஸ்தானும், பாகிஸ்தானும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வரும் நிலையில், இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் மோசமடைந்துள்ளன.