Washington 
உலகம்

வாஷிங்டன் போஸ்ட் வெளியீட்டாளர் பதவி விலகல்

மறு சீரமைப்பு மற்றும் செலவினம் குறைப்பு என்ற பெயரில் வாஷிங்டன் போஸ்ட் கடந்த சில தினங்கள் முன் 300-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது

Manigandan Raja

பதவி விலகல் :

பெரும் ஆட் குறைப்புக்கு பின்னர் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் வெளியீட்டாளர் மற்றும் தலைமை செயல் அதிகாரி வில் லூயிஸ் ((Will Lewis )) ராஜினாமா செய்தார்.

இதையடுத்து ஜெஃப் டி'ஓனோஃப்ரியோ ((Jeff D’Onofrio)) இடைக்கால தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

மறு சீரமைப்பு மற்றும் செலவினம் குறைப்பு என்ற பெயரில் வாஷிங்டன் போஸ்ட் கடந்த சில தினங்கள் முன் 300-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது குறிப்பிடதக்கது.