Also Watch
Read this
By: Manigandan Raja

நடிகர் அஜித் குமார் நடிக்கும் "டேர் டெவில்" திரைப்படம்
நடிகர் அஜித் குமார் நடிக்கும் "டேர் டெவில்" திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது துபாயில் உள்ள அஜித், சில நாட்கள் கார் பயிற்சிக்கு பிறகு படப்பிடிப்பில் இணைவார் என கூறப்படுகிறது.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், நடிகையும் அஜித் மனைவியுமான ஷாலினி இந்த படத்தை தயாரிக்க உள்ளார். பிரேவ் ஹார்ட்ஸ் புரொடக்ஷன்ஸ் என்கிற பெயரில் ஷாலினி தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
ரஸ்ஸல் க்ரோவுடன் இணையவிருக்கும் பிரியங்கா சோப்ரா
ஆஸ்கர் விருது புகழ் நடிகர் ரஸ்ஸல் க்ரோவ்-டன் ((Russell Crowe)), "ப்ளூஃபிளை" ((Bluefly)) என்ற ஹாலிவுட் திரில்லர் திரைப்படத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா இணைந்து நடிக்கவுள்ளார். "பிரிடேட்டர்ஸ்" மற்றும் "ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் தொடர்களுக்காக அறியப்பட்ட நிம்ரோட் அன்டல் ((Nimród Antal )) இப்படத்தை இயக்கவுள்ளார்.

காங்கோவில் மர்மமான முறையில் விபத்திற்குள்ளான ஒரு விமானத்தை மீட்க ரகசிய நடவடிக்கையில் ஈடுபடும் ஐ.நா. மொழிபெயர்ப்பாளரைப் பற்றிய கதையாக இப்படம் அமையவுள்ளது.படத்தின் முதன்மைப் படப்பிடிப்புகள் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்டில் ((Gold Coast)) தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved