news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews
tv

Also Watch

உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதில்

யாரைப் பார்த்தும் பயந்தது இல்லை

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Nirmal kumar

கூட்டத்தில் திமுக எம்.பிக்கள் பங்கேற்பார்களா?- நிர்மல்குமார் 

அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட முதல்வருக்கு பயமா என கேட்ட எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினிடம், முதலில் டிலிமிடேஷன் குறித்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் திமுக எம்.பிக்கள் பங்கேற்பார்களா என அமைச்சர் நிர்மல்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், மூன்று ஆண்டுகளாக தங்கள் முதல்வர் யாரைப் பார்த்தும் பயந்தது இல்லை என்றும் எந்த விதத்திலும் பயந்தது கிடையாது என்றும் தெரிவித்தார்.

இதற்கு பதலளித்துப் பேசிய எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ஏன் தண்ணீர் வரவில்லை என்று கேட்டால் அதற்கு பதிலளிக்காமல் அமைச்சர் நிர்மல்குமார் சம்பந்தம் இல்லாமல் பேசி திசை திருப்ப முயற்சிப்பதாக தெரிவித்தார்.

திமுகவின் மனுவை உச்சநீதிமன்றம் 3 முறை தள்ளுபடி செய்தது ஏன்? 

மேகதாது அணை விவகாரத்தில் திமுகவின் மனுவை உச்சநீதிமன்றம் மூன்று முறை தள்ளுபடி செய்தது ஏன்? என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பினார். மேலும், மறு சீராய்வு மனுவில் திமுக உரிய வாதங்களை எடுத்து வைக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.


இதற்கு பதிலளித்து பேசிய திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, மேகதாது விவகாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்ததாகவும், மேகதாது விவகாரத்தில் ஒற்றுமையை பற்று பேசிக் கொண்டிருக்கும்போது, கருத்து வேறுபாடு தேவையில்லை எனவும் தெரிவித்தார்.

காவிரி அணைகளில் போதிய நீர் இருந்தும் நீர் திறக்கப்படவில்லை 

காவிரி அணைகளில் போதிய நீர் இருந்தும் தண்ணீர் திறக்கப்படவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் தவெக அரசின் முதல் பட்ஜெட் மீதான விவாதங்களின்போது பேசிய இபிஎஸ், காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும், அதைதான் கூட்டணி கட்சிகளுமே வலியுத்துகின்றன என கூறினார்.

மேலும், தண்ணீர் பற்றாக்குறையால் டெல்டா விவசாயம் கருகி கிடக்கிறது, அதற்கு இந்த அரசு ஆவன செய்ய வேண்டும் எனவும் கூறி உள்ளார்.

Related Link
விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் சங்கீதா

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் சங்கீதா

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அரசின் எந்த அமைப்பிலும் பிரவீன் சக்கரவர்த்தி இல்லை

5
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved