news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

கிராமப்புற சாலையை துண்டித்து மேம்பாலப் திட்டப் பணி

மக்கள் கடும் எதிர்ப்பு

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மேம்பாலப் திட்டப் பணி

மேம்பால திட்டப் பணிக்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு 

தருமபுரி  மாவட்டம் தொப்பூர் கனவாய் விபத்து பகுதியில் பள்ளத்தை சமன் செய்து உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி ரூ.900 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் கட்டமேடு பகுதியில் 3 கிராம ஊராட்சியை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வந்த கிராமப்புற சாலையை துண்டித்து, மேம்பாலப் திட்டப் பணி நடந்து வருகிறது.

மேலும் ஏற்கனவே இருந்த இடத்தில் சந்திப்பு இல்லாமல், கனவாய் ஆஞ்சநேயர் கோவில் அருகில் திரும்புவதற்கு வழி விட திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் மானியதஅள்ளி, ஈசல்பட்டி, கம்மம்பட்டி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த 20 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட கிராமமக்கள், பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் விவசாயிகள் பயன்படுத்தி வந்த கிராமப்புற போக்குவரத்து சாலையை முற்றிலும் துண்டிக்கப்படும்.

மேலும் 4 நகர பேருந்துகள், 32 பள்ளி கல்லூரி வாகனங்கள், விவசாய விளைப் பொருட்களை ஏற்றி வரும் டிராக்டர்கள், பிக்கப் வேன்கள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் சுற்றி வர வேண்டும். இதனால் உரிய நேரத்திற்கு பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள், விளைவித்த விவசாய பொருட்களை விவசாயிகள் கொண்டு செல்ல முடியாமலும்.

பணிகளுக்கு செல்லும் பொதுமக்களும் நேரத்திற்கு செல்ல முடியாமல், சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வெள்ளக்கல் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு சாலை வழியாக சுற்றி வரும் நிலைக்கு 3 ஊராட்சி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

கிராமப்புற சாலையை துண்டித்த தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை கண்டித்தும், கட்டமேடு இடையே தரைமட்ட மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி, முன்னாள் எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் தலைமையில் 3 ஊராட்சியை சேர்ந்த கிராமமக்கள் இணைந்து, மேம்பால திட்டப் பணியை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் நேரில் வந்து, கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சுமார் 1 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின், உங்களது கோரிக்கை குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைந்து நடவடிக்கை எடுக்க எடுக்கப்பதுடன், தற்போது மேற்கண்ட இடத்தில் மட்டும் தற்காலிகமாக பணியை நிறுத்தி வைப்பதாக அதிகாரிகள் தரப்பில் உறுதி அளித்ததை தொடர்ந்து, கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். சுமார் 2 மணி நேரமாக மக்கள் நெடுஞ்சாலையில் கூடியதால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Link
பண வசூல், பூசிமெழுகும் அதிகாரிகள், செய்தியாளரிடம் சீறிய இன்ஸ்பெக்டர்

பண வசூல், பூசிமெழுகும் அதிகாரிகள், செய்தியாளரிடம் சீறிய இன்ஸ்பெக்டர்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விநோத கிணற்றை பார்க்க படையெடுக்கும் மக்கள்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved