Also Watch
Read this
By: Fyrose Banu

‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா “எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களான பிரித்விராஜ், துல்கர் சல்மான், நிவின் பாலி ஆகியோரின் படங்களும் இந்த ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியாகின்றன. அவர்களுக்கு என் வாழ்த்துகள் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மலையாள சினிமாவைப் பொறுத்தவரை, அது எந்த ஜானராக இருந்தாலும் சரி—சூப்பர் ஹீரோ படம், கிரைம், இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் என எதுவாக இருந்தாலும், மனித உணர்வுகள்தான் அதன் மையமாக இருக்கும். அதற்கு நடிகர்கள், மொழி என எந்த எல்லைகளும் தேவையில்லை. அதேபோன்ற அழகான தருணங்கள் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்திலும் இருக்கின்றன. ‘வாரணம் ஆயிரம்’, ‘கஜினி’ போன்ற படங்களையும், அதில் வரும் அன்பான கதாபாத்திரங்களையும் அழகான தருணங்களையும் நீங்கள் இன்னும் நினைவில் வைத்திருக்கிறீர்கள் என்றால், அந்த மாதிரியான நிறைய விஷயங்கள் இந்தப் படத்திலும் இருக்கின்றன என நடிகர் சூர்யா கூறினார். 
நீங்கள் எதிர்பார்ப்பது என்னவாக இருந்தாலும், நீங்கள் எதிர்பார்க்காதது என்னவாக இருந்தாலும், அனைத்தும் இந்தப் படத்தில் இருக்கிறது. கண்ணுகளா, செல்லங்களா, சாமிகளா… மழை காரணமாக இந்த நிகழ்ச்சியையே ரத்து செய்யலாம் என்று நினைத்தோம். ஆனால், நீங்கள் அனைவரும் மழையையும் பொருட்படுத்தாமல் முன்கூட்டியே வந்து காத்திருந்தீர்கள். கேரளாவை ‘கடவுளின் தேசம்’ என்று அழைக்கிறார்கள். ஆனால், நான் கேரளாவை ‘அன்பின் தேசம்’ என்றுதான் அழைப்பேன்.நாம் ஒரு ரசிகர் மன்றத்தை நலச்சங்கமாக மாற்றினோம். அதன்பிறகு அனைவருடைய வாழ்க்கையிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், நம் மீதான அந்த அன்பு மட்டும் மாறவே இல்லை.தொடர்ந்து என்மீது நீங்கள் காட்டி வரும் இந்த அன்புக்கு நான் என்றும் நன்றியுடன் இருப்பேன். இந்த அன்பு எனக்கு லைஃப்டைம் செட்டில்மென்ட்!”என நெகிழ்ச்சியுடன் நடிகர் சூர்யா தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved