Also Watch
Read this
By: Manigandan Raja

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டம்
தான் இஸ்ரேலின் பிரதமராகப் பதவி வகிக்கும் வரை, காசாவிலோ அல்லது மேற்குக் கரையிலோ பாலஸ்தீன தனி நாடு என்ற பேச்சுக்கே இடமில்லை என பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார்.
ஹமாஸ் அமைப்பு தங்களின் ஆயுதங்களை கைவிடும் வரை, காசாவில் உள்ள இஸ்ரேலிய படைகள் பின்வாங்காது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும் இஸ்ரேலியப் படைகளுக்கும் எதிராக வரும் அச்சுறுத்தல்களைத் ராணுவம் முறியடிக்கும் எனவும் இஸ்ரேல் உறுதியளித்துள்ளது.
அடுக்குமாடி குடியிருப்புகளை குறி வைத்து உக்ரைன் தாக்குதல்
ரஷ்யாவின் பெல்கோரோட்((Belgorod)) நகரில் நள்ளிரவில் அடுக்குமாடி குடியிருப்புகளை குறி வைத்து உக்ரைன் படைகள் நடத்திய டிரோன் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 25க்கும் மேற்பட்டோட் படுகாயமடைந்தனர்.

150க்கும் மேற்பட்ட டிரோன்களை கொண்டு உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கருங்கடல் பகுதியில் உக்ரைனுக்கு சொந்தமான துறைமுகத்தின் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலுக்கு உக்ரைன் பதில் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved