Also Watch
Read this
By: Manigandan Raja

அணுசக்தி ஒப்பந்தம் இல்லாமல் போர் முடிவுக்கு வரும்
ஹோர்மூஸ் நீரிணையை ஈரான் முழுமையாக திறந்தால், அணுசக்தி ஒப்பந்தம் எதுவும் இல்லாமல் போரை முடிவுக்குக் கொண்டுவர டிரம்ப் ஆலோசித்து வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஹோர்மூஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து சீரானால், ஈரானுக்கு எதிராக விதித்துள்ள கடற்படை ஆக்கிரமிப்பை நீக்கி, போர் நிறுத்தத்தை நீட்டிக்க தயாராக இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இருப்பினும் நீரிணையை திறப்பதற்கு ஈரான் விதித்துள்ள புதிய நிபந்தனையின் காரணமாக, அமெரிக்காவுடனாக ஒப்பந்தம் முடங்கியதாக தெரிகிறது.
ஈரான் உச்சத் தலைவர் கமேனியுடன் அதிபர் சந்திப்பு
ஈரான் உச்சத் தலைவர் மொஜ்தபா கமேனியின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படும் நிலையில், அந்நாட்டின் அதிபர் மசூத் பெசஸ்கியானுடன் ராணுவ மற்றும் பொருளாதார சூழல் குறித்து கமேனி ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்நியச் செலாவணி மற்றும் எரிசக்தி வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் நட்பு நாடுகளுடனான பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் முறைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக கூறப்படுகிறது.
போரில் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு நிபந்தனைகளை அமெரிக்கா நிறைவேற்ற வேண்டும்
போரில் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு மற்றும் தங்களின் நிபந்தனைகளை அமெரிக்கா நிறைவேற்றும் வரை ஹோர்மூஸ் நீரிணை திறக்கப்படாது என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல் காரணமாக ஹோர்முஸ் நீரிணையை மூடிய ஈரான், நீரிணையை கடக்கும் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தி வந்தது. தொடந்து நீரிணையை திறப்பது தொடர்பாக ஓமனுடன் இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அமெரிக்கா நிபந்தனைகளை ஏற்பதை பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என ஈரான் அறிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved