Also Watch
Read this
By: Manigandan Raja

JPSC-JSSC தேர்வு முறைகேடு - சிபிஐ விசாரிக்க கோரிக்கை
JPSC-JSSC தேர்வு முறைகேடு குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தில் மாணவர்கள் இன்று சட்டசபையை முற்றுகையிட திட்டமிட்டுள்ளனர். மாணவர்களின் போராட்டம் காரணமாக ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள 'விதான் சபாபவன்' கட்டடம் முன்பு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வால்வோ பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் தனியார் வால்வோ பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்தில் இரண்டு வாகனங்களும் 20அடி பள்ளத்தில் விழுந்ததில் 16 பயணிகள் படுகாயமடைந்தனர்.

பொகரூரு அருகே, ஆற்றுப் பாலத்தில் சென்ற போது இரு வாகனங்களும் மோதி தடுப்புச் சுவரை உடைத்து பள்ளத்தில் விழுந்தன.
அமலாக்கத்துறை இயக்குநர் ராகுல் நவீனின் பதவிக்காலம்
அமலாக்கத்துறை இயக்குநர் ராகுல் நவீனின் பதவிக்காலத்தை மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு அமலாக்கத்துறை இடைக்கால இயக்குநராக நியமிக்கப்பட்ட ராகுல் நவீன், 2024ஆம் ஆண்டு முழு நேர இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved