news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

சுங்கச்சாவடியில் கட்டணம் கட்ட மறுத்த தவெகவினர்

கொடூர தாக்குதல்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சுங்கச்சாவடியில் கட்டணம்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பரளிபுதூர் சுங்கச்சாவடியில் இன்று மதுரையில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியுடன் நத்தம் நோக்கி வந்த மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் நகரச் செயலாளர்கள் மோகன பாண்டியன் ஜெயபால், கிளைச் செயலாளர் அசோக் மற்றும் ஓட்டுநர் பார்த்திபன் ஆகியோர் வந்துள்ளனர்.

அப்போது சுங்கச்சாவடி ஊழியர்கள் சுங்கச்சாவடி கட்டணம் கேட்டுள்ளனர். இதை தர மறுத்து சுங்கச்சாவடி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட உள்ளனர் வாக்குவாதம் முக்கிய நிலையில் சுங்கச்சாவடி ஊழியர்கள் கோசலை பூபதி,இசக்கிராஜா, வசந்த் சிவா உள்ளிட்ட நான்கு பேரையும் தாக்கியதில் நான்கு பேரும் காயமடைந்து நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த நத்தம் காவல் உதவி ஆய்வாளர் மலைச்சாமி உள்ளிட்ட காவல்துறையினர் காரில் வந்த மோகன பாண்டியன் ஜெயபால் அசோக் பார்த்திபன் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து நத்தம் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அவர்கள் ஓட்டி வந்த காரை நத்தம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இச்சம்பவத்தால் சுங்கச்சாவடி சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக அப்பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.

Related Link
தவெக எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ராவை கண்டித்து போராட்டம்

தவெக எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ராவை கண்டித்து போராட்டம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கல்குவாரிகளை மூட வலியுறுத்தி 38 கிராம மக்கள் தீர்மானம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved