Also Watch
Read this
By: Manigandan Raja

தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள ரேஷன் கடையில் கம்பம் எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா நேற்று ஆய்வு செய்தபோது பொது மக்களுக்கு வழங்கும் ரேஷன் பொருட்களில் எடை குறைவாக இருப்பதாக ரேஷன் கடை விற்பனையாளரை கண்டித்தார்
இதனால் ரேஷன் கடை விற்பனையாளர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் இந்த நிலையில் ரேஷன் கடை பணியாளரை அச்சுறுத்தும் வகையில் பேசிய கம்பம் எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ராவை கண்டித்து தேனி மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ரேஷன் கடை பணியாளர்கள் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் பின்னர் செய்தியாளர்கள் சந்தித்து பேசிய நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தினர் ரேஷன் கடைகளுக்கு குறைவான எடையில் பொருட்களை வழங்கிவிட்டு, பொதுமக்களுக்கு முறையாக வழங்கவில்லை என்று குற்றச்சாட்டு கூறுவது நியாயம் இல்லை.
கடந்த ஆட்சியில் இருந்து பொட்டலம் முறையில் பொருட்கள் வழங்கும் நடைமுறையை கொண்டு வர வேண்டுமென கோரிக்கை வைத்து வருகிறோம் ரேஷன் கடை ஊழியர்களை பொதுமக்களிடையே அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் மன உளைச்சலுக்கு ஆளாக்கிய கம்பம் எம்.எல்.ஏ-வின் செயல் கண்டிக்கத்தக்கது
கம்பம் ரேஷன் கடை பணியாளரை தற்காலிக பணி நீக்கம் செய்ததை ரத்து செய்து அவருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் இல்லை என்றால் மாநில அளவில் கடை அடைப்பு மற்றும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கை எடுத்துள்ளனர் மேலும் கம்பம் எம்எல்ஏ-வின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றும் தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved