news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home
tv

Also Watch

ராமநாதசாமி திருக்கோயில் கட்டண தரிசனம் ரத்து

ராமநாதபுரம்

3

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
rmp 4

ஆடி அமாவாசை முன்னிட்டு நாளை ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோயில் கட்டண தரிசனம் ரத்து; பகல் முழுவதும் நடைதிறக்கப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் மாதந்தோறும் வருகின்ற அமாவாசை நாட்களில் தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்தால் மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இந்த நிலையில் அம்மாவாசை நாட்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த அமாவாசையாக ஆடி, தை, மாகாலயா அமாவாசை பார்க்கப்படுகிறது இந்த அம்மாவாசை நாட்களில் தம்மோடு வாழ்ந்த மறைந்த முன்னோர்களுக்கு எள்ளு பிண்டம் வைத்து திதி கொடுப்பதற்காக ராமேஸ்வரத்திற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.

இதனை தொடர்ந்து நாளை ஆடி அமாவாசை தினத்தை ஒட்டி பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலத்திலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ளதை ஒட்டி ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோயில் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது பகல் முழுவதும் நடை திறக்கப்பட்டிருக்கும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதனை தொடர்ந்து காலை 11 மணிக்கு மேல் அக்னி தீர்த்த கடற்கரையில் தீர்த்தவாரிக்கு ஸ்ரீ ராமர் புறப்பாடு நடைபெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதால் சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பட்டப்பகலில் இருசக்கர வாகனம் திருட்டு!

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved