Also Watch
Read this
By: Manigandan Raja

வெளிநாட்டை சேர்ந்தவரே பயிற்சியாளராக வாய்ப்பு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து ஸ்டீபன் பிளமிங் விலகிய நிலையில், மீண்டும் வெளிநாட்டை சேர்ந்த ஒருவரே பயிற்சியாளராக வர வாய்ப்புள்ளதாக சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
தோனி மற்றும் கேப்டன் கெய்க்வாட் ஆகியோரிடமிருந்து ஆலோசனை செய்த பிறகே அறிவிப்பு வெளியாகும் என சிஎஸ்கே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கங்குலி மற்றும் அவரது மனைவிக்கு கொலை மிரட்டல்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் கொல்கத்தா போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். கடந்த 6 மாதமாக கடிதம் வாயிலாக கங்குலிக்கும் அவரது மனைவி டோனாவுக்கும் கொலை மிரட்டல் வந்துள்ளதாக தெரிகிறது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved