Also Watch
Read this
By: Manigandan Raja

எல் நினோ காலநிலையில் தாக்கம் அதிகரிப்பு
ஐரோப்பிய ஒன்றியத்தின் காலநிலை கண்காணிப்பு சேவையின்படி, பசிபிக் பெருங்கடலில் உருவாகி வரும் எல் நினோ நிலைமைகளால் ஓரளவு தூண்டப்பட்டு, உலகின் பெருங்கடல்கள் ஜூலை மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச வெப்பநிலையை எட்டின.
உலகின் துருவப் பகுதிகளுக்கு வெளியே - அதாவது 60 டிகிரி வடக்கு மற்றும் 60 டிகிரி தெற்குக்கு இடையில் - சராசரி கடல் மேற்பரப்பு வெப்பநிலை (SST) கடந்த மாதம் 20.96°C ஆக இருந்தது. இது 2023-ல் பதிவான முந்தைய அதிகபட்சமான 20.89°C-ஐ விட அதிகமாகும்.
கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற சேவையின்படி, கடந்த மாதம் உலகளவில் இதுவரை பதிவான இரண்டாவது வெப்பமான ஜூலை மாதமாகும். இதில், தொழில்மயமாக்கலுக்கு முந்தைய மதிப்பிடப்பட்ட சராசரியை விட வெப்பநிலை 1.47°C அதிகமாக இருந்தது.
இதற்கிடையில், மேற்கு ஐரோப்பா இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான ஜூன் மற்றும் ஜூலை மாதங்களை அனுபவித்தது. அங்கு நீடித்த வெப்பமான மற்றும் வறண்ட நிலைமைகள் அப்பகுதி முழுவதும் கடுமையான காட்டுத்தீயை அதிகப்படுத்தின.
கொலம்பியா, ஈகுவேடாரை குலுக்கிய நிலநடுக்கம்
தென் அமெரிக்காவின் கொலம்பியா மற்றும் ஈகுவேடார் நாடுகளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கட்டட இடுபாடுகளில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

சோகோ((CHOCO)) பிராந்தியத்துக்குட்பட்ட பால்மர் ((PALMER)) பகுதியில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், அடுக்குமாடி கட்டடங்கள் சரிந்து விழுந்தன. மேலும் பல பகுதிகளில் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் குலுங்கியதால் மக்கள் பதறியடித்துக் கொண்டு வெளியேறினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved