Also Watch
Read this
By: Manigandan Raja

இந்தியாவின் 80-வது சுதந்திர தினம்-ரஷ்ய குழுவினர் வாழ்த்து
இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ரஷ்ய விண்வெளி வீரர்கள் குழுவினர் கையில் மூவர்ணக்கொடியுடன் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்தியா-ரஷ்யா இடையிலான உறவை வலுப்படுத்தும் விதமா தேசியக் கொடியுடன், கையில் விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான படங்களை கையின் வைத்துக் கொண்டும் ரஷ்ய வீரர்கள் உற்சாகமாக போஸ் கொடுத்தனர்.
ரஷ்யா மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் - 13 பேர் பலி
ரஷ்யாவின் மத்திய பகுதியில் உள்ள தாதர்ஸ்தான்((Tatarstan)) நகரில் குடியிருப்புகளை குறிவைத்து உக்ரைன் நடத்திய மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலில் குழந்தை உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.

சுமார் 40க்கும் மேற்பட்டோர் தாக்குதலில் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோன்று நிஸ்னேகம்ஸ்க் ((Nizhnekamsk)) பகுதியில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீதும் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அறிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved