Also Watch
Read this
By: Fyrose Banu

கூடலூரில் லாரி மீது இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு லாரியை மற்றொரு லாரி முந்தி செல்ல முயன்ற போது இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் லாரியில் மோதி விபத்தில் சிக்கினர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் இருந்து பந்தலூர் செல்லக்கூடிய நந்தட்டி பகுதியில் கனரக லாரி சென்று கொண்டிருந்தது அதனை முந்தி செல்ல மற்றொரு லாரி முயற்சித்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் லாரி மீது மோதி தூக்கி வீசப்பட்டனர்.

இந்த பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்களை அங்கிருந்த பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மூலமாக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் படுகாயமடைந்த இரண்டு இளைஞர்களும் கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved