Also Watch
Read this
By: Fyrose Banu

ராமநாதபுரம் மாவட்டம் பாண்டியூரை அடுத்த கங்கைகொண்டான் கிராமத்தில் அமைந்துள்ள அரசு நியாய விலை கடையில் கங்கைகொண்டான் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர்.

இந்த பகுதியில் முறையான மின்சாரம் விநியோகிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் நிலையில் அரிசி வாங்குவதற்காக வந்த கிராம மக்கள் 3 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் இல்லாமல் அரிசி வழங்க முடியாததால் வெயிலின் தாக்கம் காரணமாக மயக்கமற்று உறங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து நியாய விலை கடை ஊழியர்களிடம் கேட்டபோது தொடர்ந்து அவ்வப்போது இதுபோன்று சிரமம் ஏற்படுவதாகவும், மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை தகவல் அளித்தும் முறையாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர் உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved