news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news
tv

Also Watch

காதல் தோல்வி குறித்து நடிகை அனுபமா பேசிய வீடியோ இணையத்தில் வைரல்

’ரெமோ டூ அந்நியன் டூ அம்பி’

9

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
அனுபமா பேசிய வீடியோ இணையத்தில் வைரல்

காதல் தோல்வி குறித்து நடிகை அனுபமா பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

’ரெமோ டூ அந்நியன் டூ அம்பி’
நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது கடந்த கால காதல் உறவு மற்றும் அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் குறித்து வெளிப்படையாகப் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நச்சுத்தன்மை வாய்ந்த (Narcissistic) காதல் வன்முறை குறித்து சமூகத்தில் யாருக்கும் பெரிதாகத் தெரிவதில்லை என அவர் வேதனை தெரிவித்து உள்ளார். ஒரு நாள் அவர் மிகுந்த காதலைக் கொட்டும் 'ரெமோ' போல இருப்பார், ஆனால் அடுத்த நாளே முற்றிலும் மாறி 'அந்நியன்' போல மோசமாக நடந்துகொள்வார்.
பிறகு, தவறை உணர்ந்தது போல 'அம்பி'யாக மாறி, அழுது கெஞ்சி சமாதானம் செய்வார். கடந்த 2 ஆண்டுகளாக இந்த உளவியல் ரீதியான துன்புறுத்தலைத் தான் அனுபவித்து வந்ததாக அனுபமா கூறி உள்ளார். இந்த வீடியோ வைரலாகி உள்ளது.

Related Link
மொபைல் ஃபோன் பயன்பாட்டால் நரம்பு பாதிப்பு, அறுவை சிகிச்சை செய்த நடிகை ஷகிலா

மொபைல் ஃபோன் பயன்பாட்டால் நரம்பு பாதிப்பு, அறுவை சிகிச்சை செய்த நடிகை ஷகிலா

நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்துப்பதிவு
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள 'டிசி' திரைப்படத்தைப் பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன், இப்படம் ஒரு "அற்புதமான மற்றும் வெறித்தனமான திரை அனுபவம்" என்று வாழ்த்துப் பதிவை வெளியிட்டு உள்ளார். படத்தின் பின்னணி இசைக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ள சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் அனிருத் இப்படத்தை வேறொரு தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். படத்தின் மிரட்டலான மேக்கிங் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதைக்காக இயக்குநர் அருண் மாதேஸ்வரனுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை சிவகார்த்திகேயன் தெரிவித்து உள்ளார்.

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ‘பத்தா’
‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சீதக்காதி’ படங்களை தொடர்ந்து பாலாஜி தரணீதரன் - விஜய் சேதுபதி கூட்டணி இணையும் ‘பத்தா’ பட அறிவிப்பு வெளியானது. தனித்துவமான கதை சொல்லல் மூலம் இவர்களின் முந்தைய இரண்டு படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வித்தியாசமான டைட்டிலுடன் வெளியாகியுள்ள ‘பத்தா’ பட அறிவிப்பு ரசிகர்களை ஹைப் ஆக்கி உள்ளது. விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குநர் அட்லீ தயாரிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படமான 'பத்தா' வரும் அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திரைப்படம் 1960களின் காலகட்ட பின்னணியில் நடக்கும் முக்கியச் சம்பவங்களை மையமாகக் கொண்டு ஒரு பீரியட் படமாக உருவாக்கப்பட்டுள்ளது, எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Link
நடிகர் விக்ரமுக்கு நோட்டீஸ் அனுப்பிய  வனத்துறை அதிகாரிகள்

நடிகர் விக்ரமுக்கு நோட்டீஸ் அனுப்பிய வனத்துறை அதிகாரிகள்

             


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved