Also Watch
Read this
தொடர்ந்து மொபைல் போன் பயன்படுத்தியதால், நரம்பு பாதிப்பு ஏற்பட்டு கழுத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக பிரபல நடிகை ஷகிலா தெரிவித்துள்ளார்.

செல்போன் பயன்பாடு...
படுக்கையில் ஒருபுறமாக சாய்ந்து பல மணி நேரம் மொபைலில் கேம்ஸ் விளையாடுவதும், ரீல்ஸ் பார்ப்பதுமாக இருந்ததால் தனது உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

இதற்காக சுமார் 3 லட்சம் ரூபாய் வரை மருத்துவச் செலவு ஏற்பட்டதுடன், கடுமையான உடல் வலியையும் அனுபவித்ததாக தெரிவித்துள்ளார். எனவே, அதிக நேரம் செல்போன் பயன்படுத்த விடாமல் குழந்தைகளை பெற்றோர் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் ஷகிலா அறிவுறுத்தியுள்ளார்.

வீடியோவில் வேண்டுகோள்
பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஷகீலா வீடியோ ஒன்றையும் வெளியிட்டு உள்ளார். மொபைல் போன் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், குழந்தைகள் அதிக நேரம் திரை முன் செலவிடுவதை பெற்றோர் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

மொபைல் பயன்பாட்டை சாதாரண விஷயமாக நினைக்க வேண்டாம், அளவுக்கு அதிகமான திரை நேரம் உடல்நலத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் ஷகீலா வலியுறுத்தி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved