news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

தமிழ்நாடு பாடநூல் கிடங்கு ஆய்வு

வேலூர்

3

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
vlr 3

காட்பாடியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக கிடங்கை ஆய்வு செய்த தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் லயோலோ மணி, கிடங்கில் நான்கு ஆண்டுகளாக மின்சார வசதி இல்லாமல் செயல்பட்டு வருவதை அறிந்து அதிகாரிகளிடம் கடிந்து கொண்டார். மேலும் சென்னையில் உள்ள பாடநூல் கழக அதிகாரிகளுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு எதற்காக வேலூரில் செயல்பட்டு வரும் கிடங்கில் மின்சாரம் வசதி செய்து தரப்படவில்லை உடனே மின்சார வசதிகளை செய்து தர வேண்டும் என்று அறிவுறுத்தினார்.


வேலூர் மாவட்டம், காட்பாடி செயல்பட்டு வரும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக கிடங்கை இன்று தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் லயோலோ மணி ஆய்வு செய்ய வருகை தந்தார் அப்போது கிடங்கின் உள்ளே சென்ற லயோலோ மணி பாடநூல் புத்தகங்கள் வைத்திருக்கக்கூடிய கிடங்கில் எதற்காக தற்காலிக படியை தயார் செய்து வைக்கவில்லை என்றும், உள்ளே சென்று ஆய்வு செய்தபோது மின்சார ஸ்விட்ச் பாக்ஸ்கள் சேதமடைந்திருந்தது மேலும் தாழ்வாக தொங்கியிருந்த எரியாத மின்சார விளக்குகளை கண்டு எதற்காக இதையெல்லாம் சரி செய்யாமல் வைத்திருக்கிறீர்கள் உடனடியாக இதை சரி செய்யுங்கள் உங்கள் வீட்டில் இது போல் இருந்தால் நீங்கள் அங்கு இருப்பீர்களா என்று கேள்வி எழுப்பினார்

தூசு படிந்த புத்தகங்களை எதற்காக பராமரிக்காமல் வைத்திருக்கிறீர்கள் பழைய இரும்பு தளவாட பொருட்களை எதற்காக கிடங்கில் வைத்திருக்கிறீர்கள் என்றும் கிடங்கு அமைந்திருக்கும் இடம் மற்றும் கழிப்பிடங்கள் சுகாதாரம் அற்ற முறையில் இருப்பதாகவும் நாளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் இந்த பகுதிக்கு ஆய்வு வந்தால் உங்களை அவர் ஒன்றும் கேட்க மாட்டார் என்னை தான் கேள்வி கேட்பார் என்றும் உடனே அனைத்து பிரச்சினைகளையும் சரி செய்வதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளை கடிந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளருக்கு பேட்டி அளித்த தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் லயோலோ மணி முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, மாநிலம் முழுவதுமுள்ள பாடநூல் கிடங்குகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றோம் அதனடிப்படையில் 4-வது இடமாக வேலூர் பாடநூல் கிடங்கில் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் போது கண்டறியப்பட்ட மின்சாரம் தொடர்பான சிக்கல்கள் உள்ளிட்ட சிறிய அளவிலான குறைகள் ஓரிரு நாட்களில் சரிசெய்யப்படும். ​பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதால் சில இடங்களில் கூடுதலாகப் புத்தகங்கள் தேவைப்பட்டன. தலைமைக் கழகத்தில் இருந்து பெறப்பட்ட தேவைகளின் அடிப்படையில் தேவையான புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகின்றன. பாடநூல் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை.

பாடநூல் கிடங்கு வளாகத்தில் ஏதேனும் ஆக்கிரமிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டால், ஆக்கிரமிப்பாளர்கள் யாராக இருந்தாலும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து அவை மீட்கப்படும். பாடநூல்களை அச்சடிக்கும் பணிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அச்சகங்களுக்கு முன்னுரிமை அளிப்பது தொடர்பாக விரிவான கலந்தாலோசனைகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும். மாணவர் மரணம் தொடர்பாகச் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகள் நேர்மையான முறையில் நடைபெற்று வருகின்றன. இதில் எந்தவித அரசியலும் செய்யப்படவில்லை. ​மாணவர் சமுதாயத்தின் நலனைக் கருத்தில் கொண்டு பாடநூல்கள் அனைத்தும் எவ்வித தடையுமின்றி மாணவர்களுக்குச் சென்று சேர்வது உறுதி செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

புதிய பேருந்து சேவை தொடக்கம் பேருந்து சேவையை தொடங்கி வைத்த அமைச்சர் ஜெகதீஸ்வரி

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved