Also Watch
Read this

தான் திரையுலகிற்கு வந்து 22 ஆண்டுகள் நிறைவடைந்ததாக நடிகர் விஷால் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
செல்லமே...
நடிகர் விஷால், தான் திரையுலகில் அடி எடுத்து வைத்து, 22 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, தனது சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களுக்கும் இயக்குநர்களுக்கும் நன்றி தெரிவித்து நெகிழ்ச்சியாக பதிவிட்டு உள்ளார். 2004ஆம் ஆண்டு வெளியான 'செல்லமே' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக, விஷால் அறிமுகமானவர். தொடர்ந்து, சண்டக்கோழி, திமிரு, இரும்புத்திரை போன்ற பல வெற்றிப் படங்களை வழங்கியவர், 22 ஆண்டுகளைக் கடந்து திரைப் பயணத்தை தொடர்ந்து வருகிறார்.

ஒரு நடிகராகவும், தயாரிப்பாளராகவும், மனிதனாகவும் செதுக்கிய ஒட்டு மொத்த திரைத்துறைக்கும், ரசிகர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியை, விஷால் தெரிவித்து உள்ளார். தனக்கு முதல் பட வாய்ப்பளித்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் காந்தி கிருஷ்ணாவுக்கு பிரத்யேக நன்றியை விஷால் கூறி உள்ளார். கடந்த 22 ஆண்டுகளாக, தனக்கு ஆதரவளித்து வரும் ரசிகர்கள், திரையுலக நண்பர்களுக்கு நன்றி கூறி, தனது சினிமா பயணம் இன்னும் பல ஆண்டுகள் தொடரும் எனக் கூறி உள்ளார். அதே ஒழுக்கம், அர்ப்பணிப்பு மற்றும் கலை மீதான பேரார்வத்துடன் இந்த பயணம் தொடரும் என்றும் விஷால் கூறி உள்ளார்.

நடிகர் சூர்யா நன்றி
’விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் வெற்றிக்காக ரசிகர்களுக்கு, நடிகர் சூர்யா நன்றி தெரிவித்து உள்ளார்.
நடிகர் சூர்யா நடிப்பில் ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று வெளியான 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம், ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று பிளாக்பஸ்டர் வெற்றியை நோக்கி நகர்வதால், தனது அன்பான ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியுடன் சூர்யா நன்றி தெரிவித்து உள்ளார். "இந்த திரைப்படம் எனக்கு ஒரு புதிய அடையாளத்தைக் கொடுத்துள்ளது," என்று சூர்யா நெகிழ்ந்து உள்ளார். திரையரங்குகளில் படம் முழுவதும் ரசிகர்கள் முகத்தில் சிரிப்போடு ரசிப்பதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் சூர்யா கூறி உள்ளார். தமக்கு இந்த சிறப்பான கதையை வழங்கிய இயக்குநர் வெங்கி அட்லூரிக்கும், தயாரிப்பாளர் நாக வம்சிக்கும், நடிகர் சூர்யா தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

கேக் வெட்டி கொண்டாட்டம்
DC படத்தின் வெற்றியை படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார் லோகேஷ் கனகராஜ். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகி, வெளியான 'DC' திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று உள்ளது. இதனை அடுத்து, படக்குழுவினருடன் கேக் வெட்டி லோகேஷ் கனகராஜ், இந்த வெற்றியை வெகுவிமரிசையாகக் கொண்டாடி உள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம் உலகம் முழுவதும் வெறும் 4 நாளில் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து பிளாக்பஸ்டர் சாதனையை நோக்கி முன்னேறி வருகிறது.
ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைத் தொடர்ந்து, பட நாயகன் லோகேஷ் கனகராஜ், இயக்குநர் அருண் மாதேஸ்வரன், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் படக்குழுவினர் அனைவரும் ஒன்றிணைந்து கேக் வெட்டி தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved