news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews
tv

Also Watch

திருச்சியை வீழ்த்தி கோவை வெற்றி

TNPL

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கோவை வெற்றி

டி.என்.பி.எல். கிரிக்கெட் லீக் போட்டி

டி.என்.பி.எல். கிரிக்கெட் லீக் போட்டியில் கோவை அணி 116 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சியை வீழ்த்தி அமோக வெற்றி பெற்றது. நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கோவை அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன் எடுத்தது.

தொடர்ந்து களமிறங்கிய திருச்சி அணி 16.1 ஓவர்களில் 85 ரன்களுக்குள் சுருண்டு தோல்வியடைந்தது. நத்தத்தில் லீக் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், மீதமுள்ள லீக், "பிளே-ஆப்" சுற்று போட்டிகள் வரும் 18-ம் தேதி முதல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளன.

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி 

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தடுமாறி வருகிறது. இதனால், வங்கதேசத்தின் வெற்றி வாய்ப்பு பிரகாசமடைந்துள்ளது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 198 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 426 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

பிறகு, 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி ஹசன் மஹ்மூத் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து 67 ரன்கள் பின்தங்கியுள்ளது.

போட்டியை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி

உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவர் அணி முதல் ஆட்டத்திலேயே வேல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியுள்ளது. நெதர்லாந்தின் அம்ஸ்டெல்வீனில் உள்ள வேக்னர் மைதானத்தில் வேல்ஸ் அணிக்கு நடைபெற்ற போட்டியில், கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் 11-வது மற்றும் 43-வது நிமிடங்களில் 2 கோல்களை அடித்தார்.

முன்னதாக சஞ்சய் 8-வது நிமிடத்தில் இந்தியாவுக்காக முதல் கோலை பதிவு செய்தார். அதேசமயம், வேல்ஸ் அணி ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தாலும், இந்திய வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தி முன்னிலையை தக்க வைத்து 3–க்கு 1 என்ற கோல் கணக்கில் வென்றனர்.

Related Link
சிறுவர், சிறுமியர்கள் சாகசம்...!

சிறுவர், சிறுமியர்கள் சாகசம்...!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மூதாட்டியிடம் பட்டப்பகலில் செயின் பறிப்பு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved