news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சிறுவர், சிறுமியர்கள் சாகசம்...!
tv

Also Watch

சிறுவர், சிறுமியர்கள் சாகசம்...!

சிவகங்கை

2

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
svg 1

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகை ஆற்றுக்குள் நடைபெற்ற வீர விதை விளையாட்டு மற்றும் தற்காப்பு கலைகளின் பயிற்சி அறக்கட்டளை துவக்க விழாவில் சிறுவர்கள் சிறுமிகளின் சாகச நிகழ்ச்சிகளை பார்த்து பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர்

மானாமதுரை வீர விதை அறக்கட்டளை நிறுவனரும், மாஸ்டருமான பெருமாளிடம் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள், இளைஞர்கள், பெண்கள் சிலம்பம், கராத்தே, வில்வித்தை, வளரி, வால் வீச்சு உள்ளிட்ட பல்வேறு தற்காப்பு கலைகளை பயின்று வருகின்றனர்.

இவர்கள் மாவட்டம் மற்றும் மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பல்வேறு சாதனைகளை புரிந்து வருகின்றனர். இந்த அறக்கட்டளையின் பத்தாம் ஆண்டு துவக்க விழா மானாமதுரை வைகை ஆற்றுக்குள் நடைபெற்றது இதில் ஏராளமான சிறுவர் சிறுமிகள் மற்றும் இளைஞர்கள் தங்களது தற்காப்பு கலைகளை செய்து காட்டினர். இதனை பார்த்து ஆச்சரியமடைந்த ஏராளமான பார்வையாளர்கள் பாராட்டி பரிசுகளை வழங்கினர். விழாவிற்கான ஏற்பாடுகளை மாஸ்டர் பெருமாள் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள், மாணவர்கள் செய்திருந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

யார் வேண்டுமானாலும் கீழே இருந்து வரலாம்.!

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved