Also Watch
Read this
By: Manigandan Raja

பழைய புகைப்படத்தை பகிர்ந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்
வடகொரிய அரசுத் தலைவர் கிம் ஜாங் உன்னுடன் இருக்கும் தனது பழைய புகைப்படத்தை பகிர்ந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் இருவரும் நன்றாக பழகுவதாக தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் 2018 ஆம் ஆண்டு நடந்த உச்சி மாநாட்டின் போது, இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்த டிரம்ப், இந்தப் படத்தில் இருவரும் பார்ப்பதற்கு நட்பு இல்லாதது போலத் தோன்றினாலும், தாங்கள் சிரித்துப் பேசும் பல புகைப்படங்கள் உள்ளதாகவும், இருவரும் மிகச் சிறந்த முறையில் பழகி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா மற்றும் தென்கொரிய ராணுவத்தினர் இணைந்து நடத்தவிருக்கும் கூட்டு ராணுவப் பயிற்சிக்கு வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில் டிரம்ப் இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
படகு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 68 ஆக உயர்வு
ஜிம்பாப்வே படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 11ம் தேதி கரிபா ஏரியில் நடந்த இந்த கொடூர சம்பவத்தில் 18 குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். அரசு சார்பில் இயக்கப்பட்ட அந்த படகில் 90 பேரை ஏற்றிச் செல்ல மட்டுமே அனுமதி உள்ள போதிலும், குழந்தைகள் உட்பட 150 க்கும் மேற்பட்டவர்கள் பயணித்துள்ளார்.

பலத்த காற்று மற்றும் அலைச் சீற்றத்தால் படகுக்குள் தண்ணீர் புகுந்து, தலைகீழாகக் கவிழ்ந்தது. உடனடியாக மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டு 77 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மீதமுள்ளவர்களைத் தேடும் பணி தொடர்கிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved