news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews
tv

Also Watch

அமெரிக்க வீரருடன் டிரா செய்த பிரக்ஞானந்தா

லெவோன் அரோனி

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பிரக்ஞானந்தா

சின்க்பீல்டு கோப்பை செஸ் போட்டி

கிராண்ட் செஸ் தொடரின் அங்கமான சின்க்பீல்டு கோப்பை செஸ் போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தா டிரா செய்துள்ளார். அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்ற போட்டியில், அமெரிக்க வீரர் லெவோன் அரோனியனை எதிர்கொண்டார்.

வெள்ளை நிற காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தா 39-வது நகர்த்தலில் டிரா கண்டார். அதேபோல், பிரான்சின் மேஷிம் வாஷிர்- அமெரிக்காவின் வெஸ்லி சோ, அமெரிக்காவின் சாமுவேல் செவியன்- ஜெர்மனியின் வின்சென்ட் கீமர், உஸ்பெகிஸ்தானின் ஜவோகிர் சிந் தாரோவ்- அமெரிக்காவின் பேபியானோ கருணா ஆகியோர் இடையிலான ஆட்டமும் டிராவில் முடிந்தது.

ஆசிய விளையாட்டு போட்டி: ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு

ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் வழக்கமான கேப்டன் ரஷித் கான் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம்பெறவில்லை.

அதேசமயம், ஆப்கானிஸ்தான் நட்சத்திர வீரர் முகமது நபியின் மகன் ஹசன் ஈசகில் முதன்முறையாக தேசிய அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். 15 வீரர்கள் கொண்ட அணிக்கு தர்விஷ் ரசூலி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. போட்டிகள் செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 3-ம் தேதி வரை ஜப்பானில் நடைபெற உள்ளன.

ஸ்பெயின் கிரிக்கெட் அணி புதிய உலக சாதனை

சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் வென்று ஸ்பெயின் அணி உலக சாதனை படைத்துள்ளது. ஐ.சி.சி. டி-20 உலக கோப்பை 2028 தொடருக்கான ஐரோப்பிய பிரிவு தகுதிச்சுற்று நடைபெற்று வருகிறது.

பின்லாந்தின் கெரவா நகரில் நடைபெற்ற போட்டியில் பின்லாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் 21 போட்டிகளில் வெற்றிபெற்று அதிக போட்டிகளில் வெற்றி பெற்ற அணி என்கிற சாதனையை ஸ்பெயின் படைத்தது.

Related Link
உடுமலையைச் சேர்ந்த மாணவர்கள் தங்கம் வென்று சாதனை

உடுமலையைச் சேர்ந்த மாணவர்கள் தங்கம் வென்று சாதனை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

புதிய Konark எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved