news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

அனுமதியின்றி வெடிமருந்து வைத்திருந்த நபர் கைது

குச்சிவெடிகள்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
வெடிமருந்து


திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் அருகே மணக்காட்டூர் அடுத்துள்ள பொட்டிச்செட்டிகுளம் பகுதியில் அனுமதியின்றி வெடிகள் தயாரிக்கப்படுவதாக நத்தம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காவல் ஆய்வாளர் பொன். குணசேகரன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனை நடத்தினர். அப்போது, திருவிழாக்களுக்காக வானவெடிகள், குச்சிவெடிகள் தயாரிப்பதற்காக வெடி மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், நத்தம் அருகேயுள்ள செந்துறை மாமரத்துப்பட்டியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் விஜயகுமார் (35) என்பவர் திருவிழாவில் வெடிக்கப்படும்
வெடிகள் தயாரிப்பதற்காக வெடி மருந்துகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து விஜயகுமாரை நத்தம் போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து 250 கிராம் கரித்தூள், 2 கிலோ மஞ்சள் கந்தகம், சல்லடை உள்ளிட்ட பொருள்களை பறிமுதல் செய்து,நத்தம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Link
ஸ்ரீ ஊர்மாரியம்மன் கோயில் மகாகும்பாபிஷேக விழா

ஸ்ரீ ஊர்மாரியம்மன் கோயில் மகாகும்பாபிஷேக விழா


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நள்ளிரவில் வீடுகளை நோட்டமிடும் கொள்ளையர்கள்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved