news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

செல்போன் திருடியதாக கூறி இளைஞர் மீது தாக்குதல்

வீட்டு வேலை செய்து வருகிறார்

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கைது செய்த போலீசார்

கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள சாமநாயக்கன்பாளையம் ஜெ.ஜெ.கார்டன் பகுதியில் வசிப்பவர் விஜயகுமார். இவரது மனைவி கிருஜா (54). இவர் கோவில்பாளையத்தில் வீட்டு வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

2வது மகன் பெயர் சில்லட் என்கிற பிரதீப்குமார் (34). கூலி வேலை செய்து வருகிறார். திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் கடந்த 17ம் தேதி இரவு கிருஜாவின் தம்பி ஸ்ரீனிவாசன் கிருஜாவிற்கு போன் செய்து பூங்காநகரை சேர்ந்த பிரகாஷ் மற்றும் அவனது நண்பர்கள் கார்த்திக், ஹரிகிருஷ்ணன், மதுரை சிவா ஆகிய 4 பேரும் சேர்ந்து சாமநாயக்கன்பாளையம் வி.ஜி.பி கார்டன் அருகில் உள்ள காலி இடத்தில் வைத்து பிரதீப்குமாருடன் தகராறில் ஈடுபட்டதாக கூறியுள்ளார்.

உடனே கிருஜா சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, அங்கு யாரையும் காணவில்லை. அருகில் இருந்தவர்களிடம் கேட்டபோது, இங்கு ஒருவர் அடிப்பட்டு கிடந்ததாகவும்,
ஆம்புலன்ஸ் மூலம் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துசென்றதாகவும் கூறியுள்ளனர். உடனே கோவை அரசு மருத்துவமனைக்கு சென்று மயக்கநிலையில் இருந்த பிரதீப்குமாரை பார்த்தபோது, அவர் தலை, கண், நெஞ்சு மற்றும் கை என பல இடங்களில் பலத்த காயங்களுடன் இருந்துள்ளார்.

உடனடியாக கிருஜா பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரில் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பிரதீப்குமாரை நாட்களுக்கு முன்பாக இவர்கள் 4 பேருடன் சில்லட் என்கிற பிரதீப்குமார் மது அருந்தும்போது, பிரகாஷ் என்பவரின் செல்போனை திருடிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

தொடர்ந்து 4 நாட்களாக பிரதீப்குமரை காணவில்லை. இந்த நிலையில் 17ம் தேதி இரவு சாமநாயக்கன்பாளையத்தில் உள்ள மதுகடையில் மது அருந்திகொண்டு இருந்த பிரதீப்குமாரிடம் செல்போனை கேட்டபோது இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்படுகிறது.

தொடர்ந்து வி.ஜி.பி கார்டன் அருகே வைத்து கட்டையால் பிரதீப்குமாரை அடித்ததாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அடித்த 4 பேர்களையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கேரளத்திற்கு கடத்தப்படவிருந்த உர மூட்டைகள் பறிமுதல்

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved