Also Watch
Read this
By: Manigandan Raja

சென்னையில் முக்கிய பேருந்து நிறுத்தங்களில் திடீர் சோதனைகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு MTC உத்தரவு.பிற்பகல் மற்றும் மாலை நேர நெரிசல்மிகு நேரங்களில் பேருந்துகள் முறையாக நிற்கிறதா என கண்காணிக்க கிளை, மண்டல மேலாளர்களுக்கு அறிவுறுத்தல்.
குறிப்பிட்ட நிறுத்தங்களில் நிற்காமல் வேகமாகச் செல்லும் பேருந்துகள் மீது புகார்கள் குவிந்ததை அடுத்து நடவடிக்கை.பேருந்தில் ஏற வரும் பயணிகளிடம் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தவறாக நடந்துகொண்டால் கடும் ஒழுங்கு நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை.

சாதாரண கட்டணப் பேருந்துகள் அனைத்து நிறுத்தங்களிலும் கட்டாயம் நிற்க வேண்டும் என எம்.டி.சி மேலாண் இயக்குநர் டி. மோகன் சுற்றறிக்கை.எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் மற்றும் ஏசி பேருந்துகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிறுத்தங்களில் தவறாமல் நிற்க வேண்டும் எனவும் உத்தரவு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved