Also Watch
Read this
By: Fyrose Banu

திருச்செந்தூர் அருகே ஆலந்தலை புகழ்பெற்ற இயேசுவின் திரு இருதய அற்புதக் கெபியின் 99-ம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆலந்தலையில் உள்ள இயேசுவின் திரு இருதய அற்புதக் கெபியில் 99-வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாத் தொடங்கியது. தொடர்ந்து பெருவிழா வருகிற 28-ந் தேதி வரை 10-நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. பெருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு மாலையில் பெருவிழா கொடி ஊரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று கெபிக்கு கொண்டுவரப்பட்டது. 
அதனைத்தொடர்ந்து தூத்துக்குடி திருஇருதய பேராலங்களின் பங்குத்தந்தை வில்லியம் சந்தனம் பெருவிழா கொடிக்கு சிறப்பு ஆராதனைளை செய்து கொடியேற்றி வைத்து பெருவிழாவினை தொடக்கிவைத்தார். பெருவிழா தொடங்கியதை முன்னிட்டு வான வேடிக்கை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பு பிராத்தனை மேற்கொண்டனர். பெருவிழா நாட்களில் நாள்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு திருப்பலிகள் நடைபெறுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved