news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews
tv

Also Watch

100 நாள் வேலை கேட்டு அதிகாரி காலில் விழுந்த பெண்

திருவள்ளூர்

3

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
tvl 2

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் இன்று மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது, இதில் ராமச்சந்திராபுரம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் 50க்கும் மேற்பட்டோர் 100 நாள் வேலை வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைப்பதற்காக வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்பொழுது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி வெளிய அனுப்ப முயற்சித்தனர்.

அப்பொழுது அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வந்த ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் கோமதி அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் அழுது கொண்டு திடீரென்று காலில் விழுந்து 100 நாள் வேலை வழங்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டார். அதனை எடுத்த ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் கூடிய விரைவில் அளவீடு செய்து உங்கள் கிராமத்தில் 100 நாள் வேலை கட்டாயமாக வழங்கப்படும் என்று அவர் தெரிவித்த பிறகு பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

500 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம்..!

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved