news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home worldnews
tv

Also Watch

வரலாற்று சிறப்புமிக்க கோட்டையை வாங்கிய மார்க் ஜூக்கர்பெர்க்

தென்கிழக்கு அயர்லாந்து

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மார்க் ஜூக்கர்பெர்க்

அயர்லாந்தில் பழங்கால கோட்டையை வாங்கிய மெட்டா தலைவர்

மெட்டா நிறுவன சிஇஓ மார்ஜ் ஜூக்கர்பெர்க், அயர்லாந்தில் 19ஆம் நூற்றாண்டை சேர்ந்த வரலாற்று சிறப்புமிக்க கோட்டை ஒன்றை 335 கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கியுள்ளார். தென்கிழக்கு அயர்லாந்தில் Blackwater ஆற்றங்கரையில் அமைந்துள்ள கோட்டை, 16 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. கோட்டையை சுற்றிலும் சுமார் 440 ஏக்கருக்கு பரந்து விரிந்த எஸ்டேட்டும் உள்ளது.

அடுத்தடுத்து 2 வணிகக் கப்பல்கள் கடத்தல் 

ஏமன்  மற்றும் சோமாலியா கடற்பகுதியில் 22 இந்திய மாலுமிகளுடன் சென்ற இரண்டு வணிகக் கப்பல்கள் அடுத்தடுத்துக் கடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஏடென் வளைகுடா அருகே எரித்திரியா நாட்டின் கொடியுடன் சென்று கொண்டிருந்த எண்ணெய் சரக்குக் கப்பலை, ஆயுதமேந்திய கடற்கொள்ளையர் கும்பல் சிறைப்பிடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அதிலிருந்த 20 பணியாளர்களில் 16 பேர் இந்தியர்கள் எனவும், அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, கடந்த திங்கட்கிழமை சோமாலியாவின் பன்ட்லேண்ட் கடற்கரைக்கு அருகே 6 இந்தியர்களுடன் சேர்ந்து 10பயணிகளுடன் சென்ற வணிகக் கப்பல் கடத்தப்பட்டது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையிலடைப்பு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நள்ளிரவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் இம்ரான் கானுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்க கோரி அவரது குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கை விசாரித்த அந்நாட்டு நீதிமன்றம், அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க உத்தரவிட்டது.

அதனையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 6 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு பரிசோதனை செய்தது.

Related Link
பயிற்சியில் இருந்த ரோபோ ஒன்று உடைந்து விழுந்த காட்சி

பயிற்சியில் இருந்த ரோபோ ஒன்று உடைந்து விழுந்த காட்சி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"என்ன விலை" திரைப்படம் துருக்கி சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved